புதன், 23 ஜூன், 2010

தமிழ் இனம் வாழ தமிழ் மொழி வாழ வேண்டும்

விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜுன் 23 முதல் 27 முடிய ஐந்து நாள்களும் கோவை மாநகரில் கோலாகலமாக நடைபெற்று ஞாயிறு அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் நிறைவுரையோடு முடிவடைய இருக்கிறது.

மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பெருமையையும் மீண்டும் ஒரு முறை உலகறியச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

என்றாலும் இப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் கொண்ட தமிழின் நிலை தமிழ் நாட்டில் அதாவது தமிழனின் தாயகத்தில் என்னவாக இருக்கிறது என்பதும் இந்த நேரத்தில் மிகுந்த அக்கறைக்குரியது.

தமிழ் நாட்டில் உயர் கல்விகளில் தமிழ்¢ இல்லை. நிர்வாகத்தில், நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. இவை எல்லாவற்றிலும் இன்னமும் ஆங்கிலமே நீடிக்க , இதனால் மக்களிடை தொடந்து ஆங்கில மோகமே கோலோச்ச , அதை வைத்து நாடெங்கும் ஆங்கில வழிப்பள்ளிகள், புற்றீசல்கள் போல் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் என ஆங்கிலமே தமிழகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
ஆங்கில மொழிக்கோ அல்லது பிற எந்த ஒரு மொழிக்கோ நாம் எதிரானவர்கள் அல்ல ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழி அல்லாது பிற ஏதாவது ஒரு மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும். அது தற்போதைய சூழலில் ஆங்கிலமாகவே இருக்கிறது என்பது புறநிலை உண்மையாயிருந்தபோதிலும் படிப்பதைத் தாய்மொழியில் படிக்க வேண்டும், உலக அறிவு வளத்தைத் தாய்மொழியில் பெற¢ வேண்டும் என்பது முக்கியமில்லையா..... இது ஒவ்வொரு மனிதனதும் சனநாயக உரிமையில்லையா.......

இந்த நோக்கில் தமிழக முதல்வரின் பார்வைக்கு சில சிந்தனைகள்

எந்த ஒரு மொழியும் வெற்று ஆரவாரக் கூச்சல்களால், படாடோபமான அலங்கார வார்த்தைகளால் வளாந்து விடாது, வாழ்ந்து விடாது என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அம்மொழி பேசும் இனம் வாழ வேண்டும். அதே போல அந்த இனம் வாழ வேண்டும் என்றால் அந்த இனம் பேசும் மொழி வாழ வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை, ஒன்றின் மீது ஒன்று எதிர்வினை புரிபவை. எனவே, தமிழ் வாழ தமிழினம் வாழ வேண்டும், தமிழினம் வாழ தமிழ் வாழ வேண்டும் என்பது கண்கூடு.

தமிழ் வாழ வேன்டும் என்றால் அது தமிழர்களின் வாழ்வியல் மொழியாக வேண்டும். அதாவது அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம், தில்லியிலும் அதை ஆட்சி மொழியாக்குவோம் என்று சும்மா வெறுமனே வெத்து வேட்டு சவடால் முழக்கங்களையே எழுப்பிக் கொண்டிருக்காமல் தமிழைத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாக, அதாவது தமிழைத் தமிழர்களின் சமூக, பொருளியல், பண்பாட்டு மொழியாக ஆக்கி, தமிழால்தான தமிழர்கள் வாழமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு உடனடியாகச் செய்ய வேண்டுவன:

1. மழலையர் கல்வி முதல் பல்கலை மற்றும் ஆய்வுக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தமிழிலேயே தர அரசு எல்லா நிலைகளிலும் தமிழை முதலில் கல்வி மொழியாக்க வேண்டும். தற்போது பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ்வழிக் கல்வி உள்ளது அதற்கு மேல் பெரும்பாலான எல்லா கல்வியும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இத்துடன் ஆங்கிலம் உள்ளிட்டு அவரவர் விரும்பும் பிற மொழிகளையும் மொழிப்பாடமாகக் கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

2. கல்வியைத் தமிழிலே தந்து விட்டால் மட்டும் போதாது. அந்த தமிழ்க் கல்வி வாழ்க்கைக்கு, வேலைக்கு உத்திரவாதம் அளிப்பதாய் இருக்க வேண்டும். இதற்கு தமிழ் நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் தமிழக அரசு சட்டமியற்றி அதை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி சட்டமியற்றினால் எதிர்த்து நீதி மன்றம் செல்வார்களே என்று சால்ஜாப்பெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. எது வரினும் வரட்டும் அதைப் பிறகு பார்த்துக் கொள்வேர்ம் என்று முதலில் களமிறங்க வேண்டும். களத்திலேயே இறங்காமல் சும்மா கதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

3. தமிழ் நாட்டில் அரசு சார்பில் அரசு நேரே நடத்தும் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என இரு வகைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கு அப்பால் தனியார் நடத்தும் ஆங்கில வழிப்பள்ளிகளும், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பற்றாளர்களால் ஆங்காங்கே நடத்தப்படும் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஆங்கிலவழிப் பள்ளிகள் மக்களிடமுள்ள ஆங்கில மோகத்தை மூலதனமாக்கி கொள்ளைக் கட்டணம் வசூலித்து குபேர வாழ்க்கை வாழ்ந்து வர, தாய்த் தமிழ்ப் பள்ளிகள் மட்டும் மாணவர்களிடம் கட்டணமாகவும் உணர்வாளாகளிடம் நன்கொடையாகவும் பெறும் சொற்பத் தொகையைக் கொண்டு, பெரும் இழப்புகளோடும் இடுக்கண்களோடும் இப்பள்ளிகளை நடத்தி வருகின்றன. இக்குறையைக் களைய தமிழக அரசு இத் தாய்த் தமிழ்ப் ¢பள்ளிகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஆக்கி இப்பள்ளிகளுக்கான ஆசிரியர் ஊதியம், கட்டட வாடகை, பிற கற்பிப்புச் சாதனங்கள் அனைத்தையும் அரசே வழங்க வேண்டும்.

மேலோட்டமாக நோக்க இவை மிகச் சாதாரணக் கோரிக்கைகள்தானே என்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மிக ஆழமானவை தமிழ், தமிழர்களின் வாழ்வியல் மொழியாக ஆவதற்கு மிக மிக அடிப்படையானவை. காரணம் தமிழ் வழிக் கல்வி பற்றிப் பேசும் போதெல்லாம் ஆட்சியாளர்கள் அதற்கு எதிராகச் ¢சொல்லும் ஒரே காரணம், மக்களெல்லாம் ஆங்கில மோகத்தில் இருக்க அதற்கேற்பத்தானே ஆட்சி நடத்த முடியும், கல்விக் கொள்கையை வகுக்க முடியும் என்பதுதான். ஆனால் இது போலியானது மாயையானது என்பதே உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கவே இக்கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டாம் மூன்றாம் கோரிக்கைகளை மட்டும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றினால் போதும். ஆங்கில வழிக் கல்வி மோகமெல்லாம் காற்றாய்ப் பறந்து போகும்.ஆங்கில வழியில் படிப்பவர்களெல்லாம் தானாய்த் தமிழ் வழிக் கல்விக்குத் திரும்மபுவார்கள். அதே போல ஆங்கில வழிப் பள்ளிகள் நடத்துபவர்கள் எல்லாம் அரசு நிதியுதவி பெறுவதற்காகத் தானாய்த் தமிழ் வழிப் பள்ளிகள் நடத்த முன் வருவார்கள். அவர்கள் நோக்கம் பொருளீட்டுவதுதானே தவிர அவர்கள் ஒன்றும் ஆங்கில தாசர்கள் அல்ல. எனவே இம்மூன்று கோரிக்கைகளை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றினால் போதும், தமிழ் தானாய்த் தழைக்கத் தொடங்கிவிடும்.

இக் கோரிக்கைகளுக்கு அப்பால் நிறைவாக ஒன்று. ஒரு சமூகம் தன் கடந்தகால வரலாற்றை அறிந்திருப்பது அவற்றின் மூலம் பெருமிதம் கொள்ளவோ படிப்பினை பெறவோ அச்சமூகத்தின் கருத்தியல் கட்டமைப்புக்கு பெருமளவு து£ண்டுதலாயிருக்கிறது. இந்த வகையில் இந்தத் தலை முறை இளைஞர்களுக்கு பள்ளிப் பாடப் புத்தகம் தாண்டிய தமிழ், தமிழர் வரலாறு குறிப்பாக 1938 மொழிப் போரில் சிறையேகி உயிர் நீத்த நடராசன் தாளமுத்து ஆகியோர் பற்றியோ, அல்லது 1964-1965 மொழிப் போரில் தீக்குளித்து உயிர் நீத்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் பற்றியோ தெரியாது, தெரிய வாய்ப்பில்லை.

எனவே இம் மொழிப் போரில் உயிர் நீத்த ஈகிகளின் வீர வரலாற்றைப் பள்ளிக்கூடங்களில் பாடமாக, கல்லு£ரிகளில் துணைப் பாடமாக வைக்க வேண்டும். இப்படி வைத்தால்தான் அதைப் படிக்கும் புதிய தலைமுறை தன் வேர்களை உணர்ந்து, தாய்மொழிக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியில் ஊக்கம் பெறும். மொழிப் பற்றும் இனப் பற்றும் கொண்டு வளரும்.தமிழ் தழைக்க தமிழினம் தழைக்க பாடுபடும்.

இப்படி மொழி வழி இனமும், இனத்தின் வழி மொழியும் வாழ்வதும் வளர்வதுமே அறிவியல் நோக்கு. “தமிழினம் வீழாமல் இருக்க கோவையில் தமிழுக்கு விழா எடுப்பதாகஉடன் பிறப்புகளுக்குக் கடிதம் எழுதி விழாவுக்கு அழைத்த தமிழக முதல்வர், தமிழ் வீழாமல் காக்க மேற்கண்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவாரா, தமிழ்ச்¢ செம்மொழி மாநாட்டில் இதுபற்றி ஏதேனும் அறிவிப்பாரா, நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழினம். காப்பாற்றுவாரா முதல்வர்.?தமிழ் இனம் வாழ
தமிழ் மொழி வாழ வேண்டும்-மண்மொழி இராசேந்திரசோழன்பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜுன் 23 முதல் 27 முடிய ஐந்து நாள்களும் கோவை மாநகரில் கோலாகலமாக நடைபெற்று ஞாயிறு அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் நிறைவுரையோடு முடிவடைய இருக்கிறது.

இப்படி மொழி வழி இனமும், இனத்தின் வழி மொழியும் வாழ்வதும் வளர்வதுமே அறிவியல் நோக்கு. “தமிழினம் வீழாமல் இருக்க கோவையில் தமிழுக்கு விழா எடுப்பதாகஉடன் பிறப்புகளுக்குக் கடிதம் எழுதி விழாவுக்கு அழைத்த தமிழக முதல்வர், தமிழ் வீழாமல் காக்க மேற்கண்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவாரா, தமிழ்ச்¢ செம்மொழி மாநாட்டில் இதுபற்றி ஏதேனும் அறிவிப்பாரா, நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழினம். காப்பாற்றுவாரா முதல்வர்.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக